முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சியங்கள் கொண்ட வழக்கின் விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் ஆரம்பமாகியுள்ளது.
தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்காக போலியான பிறப்புச் சான்றிதழை தயாரிக்க உதவியதன் மூலம் அரசு அதிகாரிகளை தவறாக வழிநடத்த முயற்சித்தமை உட்பட மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் டயானா கமகே மீது சட்ட மா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
வழக்கு நேற்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது டயானா கமகே நீதிமன்றில் ஆஜரானார்.
