பெருந்துறை அருகே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 20 பேர் காயம் பெருந்துறை அருகே இரு சக்கர வாகனம் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உயிரிழந்தார்.
கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கோவையில் இருந்து பெங்களூரு நோக்கி 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து ஒன்று இன்று (வியாழக்கிழமை) காலை வந்து கொண்டிருந்தது. ஈரோடு மாவட்டம் , பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பேருந்து வந்தபோது, இரு சக்கர வாகனம் ஒன்று சாலையைக் கடக்க முயற்சித்தது.அப்போது, இருசக்கர வாகனத்தின் மீது
�
மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் முயற்சித்தார். இதன் காரணமாக சொகுசு பேருந்தில் பின்னால் வந்த அரசு பேருந்து பின்பகுதியில் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பேருந்து சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோருக்கு காயம் அடைந்தனர்.இரு வாகனத்தில் வந்த பெருந்துறையைச் சேர்ந்த குப்பன் (65) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்தவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் குறித்து பெருந்துறை காவல்துறையினர் விசாரணைநடத்தி வருகின்றனர்
