பூட்டிய வீட்டில் 3 பேர்? பேங்க் ஆபீசரின் “விளையாட்டு”! ரூ.50 லட்சம் குழப்பம் நீடிப்பு நாமக்கல்

asees-down-1741149215.webp

நாமக்கல்: நாமக்கல் அருகே வீட்டிற்குள் 3 பேர் இறந்து கிடந்த சம்பவம் மிகப்பெரிய சந்தேகத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது.. இதுகுறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளதுடன், சம்பந்தப்பட்டவரை தேடும் பணி 2வது நாளாக முடுக்கி விடப்பட்டுள்ளது.இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில், ஆன்லைனில் ரூ.50 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கடிதம் எழுதி வைத்து

விட்டு, தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், பெரியமணலியை சேர்ந்தவர் பிரேம்ராஜ்.. 38 வயதாகிறது.. இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் வங்கியில், இன்சூரன்ஸ் பிரிவில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் மோகனபிரியா.. 34 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு பிரணிதா (6) என்ற மகளும், பிரணித்(2) என்ற மகனும் உள்ளனர். தரையில் கிடந்த உடல்கள் இவர்கள் குடும்பத்துடன் நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள பதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். நேற்றைய தினம், இந்த குடும்பத்தினர் யாருமே வீட்டின் வெளியே வராமலேயே இருந்துள்ளனர்.. இதனால் சந்தேகம் அடைந்த ஹவுஸ் ஓனர் பாரி, ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது, வீட்டுக்குள் மோகனபிரியா மற்றும் அவரது 2 குழந்தைகள்

சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து நாமக்கல் போலீசுக்கு தகவல் தந்ததையடுத்து அவர்கள் விரைந்து சென்று, சடலங்களை கைப்பற்றினார்கள்.. 3 சடலங்களும் தரையில் கிடந்துள்ளன.. அவைகளை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு இதுசம்பந்தமான விசாரணையையும் மேற்கொண்டனர். சடலங்கள் கிடந்த வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.ஆன்லைன் ஆப் நஷ்டம் அப்போதுதான், ஒரு பெரிய நோட்டு புத்தகத்தில், கடிதம் ஒன்று இருப்பதை கண்டெடுத்தனர்.. அந்த கடிதத்தை பிரேம்ராஜ் எழுதியிருந்தார்.. அதில், “ஆன்லைன் ஆப் மூலம் எங்களுக்கு இந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த கடனை எப்படி கட்டுவது என்றே தெரிவில்லை. எங்களை மன்னித்து விடுங்கள” என எழுதியுள்ளார். இந்த கடிதத்தை

போலீசார் கைப்பற்றி, உடனடியாக பிரேம்ராஜின் செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்டனர்.. ஆனால், செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பிரேம்ராஜ் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. தற்கொலைக்கான அடையாளங்கள் இதுகுறித்து போலீசார் சொல்லும்போது,”தாயும், 2 குழந்தைகளும் தூக்கில் தொங்கியதற்கான அடையாளங்கள் வீட்டில் தென்படுகிறது. அவர்களது கழுத்தில் தூக்கு மாட்டி இறந்ததற்கான காயங்களும் உள்ளன.. வீட்டில் உள்ள துணிகளும் கலைந்து கிடக்கின்றன.. 3 பேரின் சாவில் பிரேம் ராஜூக்கு என்ன தொடர்பு என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தபட்டு வருகிறது.. அவரையும் தேடி கொண்டிருக்கிறோம்” என்றனர். ஒரே மர்மம் – குழப்பம் – சந்தேகம் உண்மையிலேயே

கடன் தொல்லையால் இந்த மரணம் நிகழ்ந்ததா? தற்கொலையா? கொலையா? என தெரியவில்லை.. கடன் தெல்லை என்றால், பிரேம்ராஜ் மட்டும் எப்படி தப்பினார்? 4 பேருமே தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்று கடிதம் எழுதியுள்ள நிலையில், எதற்காக குடும்பத்தினரை கொலை செய்தார் என்றும் தெரியவில்லை. கணவன் மாயமான நிலையில், குழந்தைகளை கொன்றுவிட்டு, மோகனபிரியா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். ஆனாலும், பிரேம்ராஜ் பிடிபட்டால் தான் உண்மை தெரியவரும். எனவே, விசாரணை நடக்கிறது.. பூட்டிய வீட்டிற்குள் தாய், 2 குழந்தைகள் மர்மமாக உயிரிழந்த கிடந்த சம்பவமும், ஆன்லைனில் ரூ.50 லட்சம் இழப்பு என்று கடிதம் கிடைத்துள்ளதும், சம்பந்தப்பட்டவர் தலைமறைவாகியிருப்பதும் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *