மாகாண சபை தேர்தலில் முதலமைச்சராக களமிறங்க தயாரில்லை – சிறீதரன் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் தமக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபை தேர்தல் நடாத்துவதாக இருந்தால் தேர்தல் திருத்தம் முதலில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
