விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர

download-3-5.jpeg

புதிய விமானப்படைத் தளபதி நியமனம் இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

தற்போது விமானப்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றும் ஏர் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர, 1991 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையில் இணைந்தார்.

இலங்கை விமானப்படையின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன நேற்று சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *