என்னை பாலியல் குற்றவாளி என்று சொல்வதற்கு நீங்கள் யார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது எப்படி என்னை குற்றவாளி என்று கூறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய சீமான், நீங்கள் என்ன நீதிபதியா என்றும் சீறி இருக்கிறார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை கொடுத்த பாலியல்
�
வன்கொடுமை விவகாரம் தொடர்பாக 12 வாரங்களில் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு சீமான் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே நடிகை குறித்த சீமானின் பேச்சுகள் அரசியல்வாதிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி கூறுகையில், இதுகுறித்து அவர் வீட்டில் இருக்க கூடிய பெண்களே கேள்வி எழுப்ப வேண்டும். இதனைவிடவும் கேவலமாக பெண்களை
�
அவதூறாக பேசுவதை கேட்டு சகித்துக் கொண்டு எப்படி கட்சியில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறி இருந்தார். கனிமொழியின் பேச்சுக்கு சீமான் பதில் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், சும்மா பாலியல் குற்றவாளி என்று என்னை சொல்லாதீர்கள். என்னை பாலியல் குற்றவாளி என்று நீங்கள் எப்படி கூறுவீர்கள்? நீங்கள் என்ன நீதிபதியா? விசாரணை நடக்கும் போது நீங்கள் எப்படி என்னை குற்றவாளி என்று சொல்ல முடியும்? ஆயிரம் சொல்லலாம்.. என்னை பழி சொல்பவர்கள் குறித்து நானும் பழி சொல்லவா?
�
என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை முடியும் போது தான் அவை உண்மையா? பொய்யா என்பது தெரியும். அதற்குள் குற்றச்சாட்டை வைத்தால், அதன் பின்னுள்ள நோக்கம் என்ன்? அம்மையார் கனிமொழி பொள்ளாச்சி சம்பவம், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக எதுவும் பேசவில்லை. பள்ளி மாணவிகளை துன்புறுத்தும் ஆசிரியர்கள் குறித்து கருத்து சொன்னாரா என்னை எதிர்கொள்ள முடியாமல் நடுங்குகின்றனர். என்னை பார்த்து நடுங்குவதால் எனக்கு எதிராக சதி செய்து வருகிறார்கள். எது வளர்ச்சி என்று கேட்டால் உங்களால் பதில் சொல்ல
�
முடியவில்லை. வளங்களை அழிப்பதே வளர்ச்சி என்பதுதான் உங்களின் கொள்கையா? உருவாக்க முடியாத இயற்கை வளங்களை அழிக்க உங்களுக்கு உரிமையை கொடுத்தது யார்? தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் டன் பாறைகள் கொண்டு செல்லப்படுகின்றன. கேரளாவின் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுகிறது என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மேலும் சீமான் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
