அமெரிக்கா துணையின்றி ஐரோப்பாவால் ரஷ்ய ராணுவத்தை சமாளிக்க முடியுமா? டொனால்ட் டிரம்ப் தனது சொந்த அதிகாரிகள் சிலரை விடவும், பிரிட்டனின் ஓய்வுபெற்ற உயர்மட்ட ராணுவ அதிகாரிகளை விடவும், பிரிட்டனின் ஆயுதப் படைகளின் திறன்களில் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகத் தோன்றுகிறது.
யுக்ரேனுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்குமா என்று பிரிட்டன் பிரதமருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த போது டிரம்பிடம் கேட்கப்பட்டது.
“பிரிட்டனிடம் நம்ப முடியாத அளவுக்கு வீரர்கள் மற்றும் ராணுவ பலம் உள்ளது. அவர்களால் தங்களைக் கவனித்துக் கொள்ள முடியும்,” என்று டிரம்ப் அக்கேள்விக்குப் பதிலளித்தார்.
ஆனால், பிரிட்டன் ராணுவத்தால் ரஷ்யாவை எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தெளிவாகப் பதிலளிக்கவில்லை.
