போப் பிரான்சிஸ் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதது

download-1-1.jpeg

கடந்த 24 மணி நேரத்தில் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக கருதப்படுபவர் போப் ஆண்டவர் என அழைக்கப்படும் போப் பிரான்சிஸ், 88; ஐரோப்பிய நாடான இத்தாலியின் தலைநகர் ரோம், வாடிகன் நகரில் வசித்து வருகிறார். அவருக்கு, மூச்சுக்குழாயில் அழற்சி,

சிறுநீரகப் பிரச்னை இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது.ரோம் நகரில் உள்ள ஜெமிலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நிமோனியா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் கூறியிருந்தது. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுநீரக பிரச்னை சரியாகி வருகிறது. தற்போது நுரையீரல் வீக்கம் சரியாக வருகிறது.

இன்று நடத்தப்பட்ட ரத்த பரிசோதனைகள் மூலம் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து குணமடைந்து வருவதால் போப் மருத்துவமனை அறையில் வழக்கமான பணிகளை மேற்கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *