10 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம்,
�
புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல், நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இந்நிலையில், கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, காவிரி படுகை மாவட்ட
�
ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.மழையால் நெல் பாதிக்கப்படாமல் கொள்முதல் செய்திடவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பாக வைத்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார். இன்றும், நாளையும் காவிரி படுகை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
