மஹிந்த யாப்பா அபேவர்தன 40 லட்சம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு

download-2-61.jpeg

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மாதத்திற்கு 40 லட்சம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 70 பணியாளர்கள் இருந்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.9 வாகனங்களுக்கு 33 மில்லியன் ரூபாய் எரிபொருள்

2024 ஆம் ஆண்டில் அவரது பதவிக்காலத்தில் 9 வாகனங்களுக்கு 33 மில்லியன் ரூபாய் மதிப்பிலான எரிபொருள் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 70 பணியாளர்கள் இருந்தனர்.2024 ஜனவரி 01 முதல் செப்டம்பர் 24 வரை அவர் பயன்படுத்திய 9 வாகனங்களுக்கான எரிபொருள் செலவு 33 மில்லியன் ரூபாய். ஒரு மாதத்திற்கு 40 லட்சம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார்.

அந்த காலகட்டத்தில் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ 6 வாகனங்களுக்கு 135 லட்சம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார்.அதேவேளை முன்னாள் சபாநாயகர்கள் மற்றும் துணை சபாநாயகர்கள் உணவு மற்றும் உணவுப் பொருட்களையும் கூட போலி பில் போட்டு வீட்டிற்கு எடுத்துச் சென்றதாக ரத்நாயக்க கூறினார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *