லட்சுமி நாராயண ராஜயோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் நிதி நிலையில் உயர்வு ஏற்படப்போகுது.புத்திசாலித்தனம், படிப்பி, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். கிரகங்களிலேயே புதன் குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர். இந்த புதன் இதுவரை சனி பகவானின் கும்ப ராசியில் பயணித்து வந்தார்.இந்நிலையில் புதன்
�
பிப்ரவரி 27 ஆம் தேதி, குரு பகவானின் மீன ராசிக்குள் நுழைகிறார். அதே சமயம் இந்த மீன ராசியில் ஏற்கனவே அசுரர்களின் குருவும், செல்வம், காதல், அழகு, செழிப்பு, ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியுமான சுக்கிரன் பயணித்து வருகிறார். இதனால் மீன ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது.இந்த ராஜயோகமானது மிகவும் மங்களகரமான யோகமாகும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
�
இப்போது லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். �
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அவ்வப்போது நிதி நன்மைகளைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தொழிலதிபர்கள் அல்லது வியாபாரிகளின் பண பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் இந்த ராஜயோகத்தால் செல்வம் பெருகுவதோடு, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்
�
.மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். பணிபுரிபவர்கள் நீண்ட காலமாக பதவி உயர்வுக்கு காத்திருந்தால், இக்காலத்தில் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் ஏற்படலாம். இதுவரை தந்தையுடன் பிரச்சனை இருந்தால், இன்று முதல் தன்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும். வருமானம் முன்பை விட சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைத்து, ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியும், நிதி ஆதாயமும் கிடைக்கும். மாணவர்களுக்கு இன்று முதல் சிறப்பாக இருக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபம் கிடைக்கும். சுப காரியங்களில் அதிகம் பங்கேற்கக்கூடும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதோடு வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடுவதோடு, நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கும். (பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
