மேடையில் ஏறியதுமே தேடுனாரே..! உடனே மைக்கில் அழைத்து.. பிரசாந்த் கிஷோரை தனக்கு அருகே அமர வைத்த விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா மேடையில் ஏறிய தவெக தலைவர் விஜய், பிரசாந்த் கிஷோரை மேடைக்கு அழைத்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. பிரசாந்த் கிஷோரை மேடைக்கு அழைத்து தனக்கு அருகே அமர வைத்தார் விஜய்.கடத்த ஆண்டு நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் கட்சியை தொடங்கி தீவிர அரசியலுக்கு
�
நுழைந்தார். 2026 சட்டசபை தேர்தலையொட்டி தவெகவின் அரசியல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அண்மையில் பரந்தூர் சென்று மக்களைச் சந்தித்த விஜய் இன்று கட்சியின் இரண்டாம் ஆண்டு விழாவை பிரமாண்டமாக நடத்துகிறார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தொடங்கியது. இதில் தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழா மேடையில் தவெக தலைவர் விஜய் ஏறியதும், இருக்கையில் அமர்ந்தார். தவெக முக்கிய
�
நிர்வாகிகள் பலர் மேடையில் இருந்தனர். அதைத் தொடர்ந்து, எழுந்த விஜய், மைக் அருகே சென்று, “பிரசாந்த் கிஷோர் அவர்களையும் மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறேன்” எனத் தெரிவித்தார். இதையடுத்து, விஜய்யின் வேண்டுகோளை ஏற்று பிரசாந்த் கிஷோர் மேடைக்கு வருகை தந்தார். கைகூப்பி அனைவரையும் வணங்கிய படியே மேடைக்கு வந்த பிரசாந்த் கிஷோர் விஜய்க்கு அருகே இருக்கையில் அமர்ந்தார்.முன்னதாக, தவெக இரண்டாம் ஆண்டு விழா மேடைக்கு அருகே மும்மொழி
�
கொள்கையையும், மத்திய, மாநில அரசுகளையும் விமர்சிக்கும் வாசகங்களுடன் GetOut கையெழுத்து பதாகை வைக்கப்பட்டிருந்தது. அதில் தவெக தலைவர் விஜய் கையெழுத்திட்டு #GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அடுத்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கையெழுத்திட்டார்.பின்னர் பேனாவை பிரசாந்த் கிஷோரிடம் கொடுத்த போது அவர் தான் கையெழுத்திட மாட்டேன் என்று தலையாட்டி பேனாவை வாங்க மறுத்து விட்டார். அதன் பிறகு ஆதவ் அர்ஜுனா அந்த பேனரில் கையெழுத்திட்டார். இந்த விழாவில் பிற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் த.வெ.க கட்சியில் இணைய உள்ளனர். தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பிரசாந்த் கிஷோர் நேற்று இரவு நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி, புஸ்
