திருச்சி யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு வரும் மார்ச் மாதம் முதல்

process-aws.webp

தமிழகத்தின் திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு வரும் மார்ச் மாதம் முதல் புதிய விமானச் சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி மார்ச் மாதம் முதல், பிற்பகல் 12.55 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் விமானம் 1.55 மணிக்கு யாழ்ப்பாணம் சென்றடையும். பின்னர் அது பிற்பகல் 2.55 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மாலை 3.50 மணிக்கு திருச்சி வந்தடையும் என்றும் கூறப்படுகின்றது.பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்
இந்த விமான சேவையால் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்பவர்கள் மிக எளிதாக, குறைந்த கட்டணத்தில் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது திருச்சியில் இருந்து கொழும்புக்கு தினமும் இரண்டு முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

இதுவரை சென்னையில் இருந்து மட்டுமே யாழ்ப்பாணத்திற்கு விமாசேவை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி விமான நிலையத்தில் இருந்தும் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளமை பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதேவேளை நிறுத்திவைக்கபப்ட்டிருந்த நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் பயணிகள் கப்பல் சேவை கடந்தவாரம் முதல் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடப்பைடத்தக்கது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *