இன்று கடலூர் செல்கிறார் முதல்வர் முக ஸ்டாலின்.. ரூ. 387 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டம் கடலூரில் ரூ. 387 கோடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக இன்று கடலூர் செல்லவுள்ள முதல்வர் முக ஸ்டாலின் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு
�
நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று பல்வேறு திட்டங்கள் மூலமாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, நிறைவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தும் வருகிறார். அந்த வகையில், கடலூரில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவடைந்த பணிகளை திறந்து வைக்கவும், 44 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்வர் முக ஸ்டாலின் இன்று கடலூருக்குச் செல்கிறார்.இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 11,716 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் பட்டா வழங்கப்பட உள்ளன. 84 பயனாளிகளுக்கு கல்வி உதவித்
�
தொகை, 61 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, உள்ளிட்ட 12,226 பயனாளிகளுக்கு ரூ.164 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்படவுள்ளன. அதேபோல, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 500 பயனாளிகளுக்கு குடியிருப்புகள் வழங்கப்படவுள்ளன. பழங்குடியினர் குடியிருப்புகள் திட்டத்தின் கீழ் 225 பயனாளிகளுக்கும், புனரமைக்கப்பட்ட ஊரகக் குடியிருப்புகள் திட்டத்தின் மூலம் 4,300 பயனாளிகளுக்கும் என மொத்தம் ரூ.5,025 பயனாளிகளுக்கு ரூ.55.23 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 516 பயனாளிகளுக்கு ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் உட்பட பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 44,690 பயனாளிகளுக்கு ரூ. 387.66 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
