கேரளா அரசு கல்லூரி ராகிங் பிரச்னை – போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைப்பு
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அரசு நர்ஸிங் கல்லூரி முன்பு ஏ.ஐ.ஒய்.எஃப் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் ராகிங் பிரச்னைக்கு எதிராக இன்று(பிப்.15) போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்தனர்.
இந்த கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த குற்றச்சாட்டில் கடந்த புதன்கிழமை ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
