பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார்.தீர்வு கிடைக்குமா?

download-3-25.jpeg

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி.. தீர்வு கிடைக்குமா?
வாசிங்டன் டி.சி. நகரில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவும் சூழலிலும், பிரதமர் மோடியை வரவேற்க இந்திய வம்சாவளியினர் அங்கு திரண்டு இருந்தனர்.

பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். இந்திய நேரப்படி அதிகாலை 5 மணியளவில் வாசிங்டன் டி.சி. நகரில் உள்ள ஆண்ட்ரூ விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.வாசிங்டன் டி.சி. நகரில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவும் சூழலிலும், பிரதமர் மோடியை வரவேற்க இந்திய வம்சாவளியினர் அங்கு

திரண்டு இருந்தனர். 2 நாட்கள் அமெரிக்காவில் பயணிக்கும் பிரதமர் மோடி, அங்கு அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்திக்கிறார்.இந்த சந்திப்பின் போது இருநாடுகள் இடையேயான நட்புறவு, வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தித் துறை, சட்டவிரோத குடியேற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடுவார்கள் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த பயணத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கையும் பிரதமர் மோடி சந்திப்பார் என்றும், அப்போது இந்தியாவில் ஸ்டார் லிங்க் இணைய சேவையை தொடங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *