லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக India Today- C Voters இணைந்து கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தன. இந்த கருத்து கணிப்பு முடிவுகளானது தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து மெகா கூட்டணி அமைத்தால் மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்த முடியும் என்பதை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது என்கின்றனர்
�
அரசியல் பார்வையாளர்கள்.India Today- C Voters கருத்து கணிப்பு சொல்வது என்ன? தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் திமுக கூட்டணி 38 முதல் 39 இடங்களைக் கைப்பற்றும்; அதிமுக, பாஜக அணிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 52% ஆகவும் அதிமுக வாக்ககு சதவீதம் 20%; பாஜக கூட்டணி வாக்கு சதவீதம் 21% ஆக இருக்கும். 2024-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 4% அதிகரிக்கும்; அதிமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 3% குறையும்; பாஜக
�
கூட்டணியின் வாக்கு சதவீதம் 3% அதிகரிக்கும். India Today- C Voters கருத்து கணிப்பின் தாக்கம் என்ன? India Today- C Voters கருத்து கணிப்பின் படி, தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியே வலிமையாக இருக்கிறது; இதனால் அந்த கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது என்கிறது.அதேநேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்து அந்த வாக்குகள் அப்படியே பாஜவின் வாக்கு சதவீதமாக மாறுகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.அத்துடன் தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்தால் அதாவது அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா மற்றும் சிறிய கட்சிகள் அனைத்தும் இணைந்து மெகா கூட்டணி ஒன்றை அமைத்தால் எந்தவித
�
எதிர்ப்புமே இல்லாமல் அனைத்து தொகுதிகளையும் தன்வசமாக்கும் திமுக கூட்டணிக்கு கடும் போட்டியாக உருவெடுக்க முடியும்; தற்போதைய கணக்குகளின்படியே பார்த்தாலும் அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தா சுமார் 41% வாக்குகள் கிடைக்கும்; அப்படி ஒரு மெகா கூட்டணி அமைந்தால் திமுக கூட்டணியின் 51% வாக்குகளில் சரிவும் ஏற்படும்; அது தேர்தல் களத்தில் கடுமையான போட்டியை உருவாக்கும்; அதிமுக- பாஜக அணிக்கு கணிசமான இடங்களையும் கொடுக்கவும் சாத்தியமிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த கள யதார்த்தத்தைப் புரிந்து கொண்டுதான் பாஜகவும் எப்படியாவது ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்கி அதனுடன் கூட்டணி வைக்க வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறது என்பதையும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
