பிரான்ஸ் அதிபருடன் இணைந்து, பிரதமர் மோடி இணை தலைமை வகிக்கிறார்

  • download-27.jpeg

பிப்ரவரி 11ம் தேதி பாரிசில் ஏ.ஐ., தொழில்நுட்பம் தொடர்பான உச்சி மாநாடு நடக்கிறது. இதில், பிரான்ஸ் அதிபருடன் இணைந்து, பிரதமர் மோடி இணை தலைமை வகிக்கிறார் கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி 20 உச்சிமாநாட்டின் போது, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும்

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த வேண்டும் என இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.இந்நிலையில், பிப்ரவரி 11ம் தேதி பாரிசில் ஏ.ஐ., உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். சீனாவின் துணைப் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பிரான்ஸ் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

பிப்ரவரி 12ம் தேதி மார்சேயில் அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். விண்வெளி, தொழில்நுட்பம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் துறைகளில் இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் இடையேயான உறவு குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

அப்போது இருநாட்டுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. பிரான்சின் மார்சேயில் இந்தியா புதிய தூதரகத்தையும் திறக்க உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *